சென்னை சர்வதேசப் படவிழா இத்தனை ஆண்டு களைக் கடந்தும் இன்னும் சவலைப் பிள்ளையாகவே தவழ்கிறது.
டிசம்பர் மாத சென்னையின் முக்கியக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான அதில் இம்முறை ‘ஸ்டேட் போகஸ்’ என்கிற பிரிவில் 5 மலையாளப் படங்கள் திரையிடப்படுவது ஆச்சரியம்!
அதேபோல் 2026ஆம் ஆண்டு ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான பிரிவுக்கு நாடுகளின் அதிகாரபூர்வப் பரிந்துரையாகத் தேர்வு செய்யப்பட்ட 14 படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன.
அவற்றில் ‘யங் மதர்ஸ்’, ‘தி திங்ஸ் யூ கில்’, ‘எ போயட்’, ‘100 லிட்டர்ஸ் ஆஃப் கோல்ட்’, ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்’, ‘சவுண்ட் ஆஃப் ஃபாலிங்’, ‘தி லவ் தட் ரிமெய்ன்ஸ்’, ‘ஆல் தட்’ஸ் லெஃபட் ஆஃப் யூ’, ‘சென்டிமென்டல் வேல்யூ’ ஆகிய படங்களைத் தவறவிடாதீர்கள். பெர்லின் படவிழாவில் தங்கக் கரடி விருதுபெற்ற ‘ட்ரீம்ஸ்’, ‘பெர்டெனல் லீவ்’ ஆகிய படங்களும் கவனத்துக்குரியன.