களஞ்சியம்

நோபல் பரிசு முதல் தேசிய திரைப்பட விருதுகள் வரை @ 2025 | மறக்க முடியுமா?

Guest Author

நோபல் பரிசு:

* தடுப்பாற்றல் மண்டலத்தை ஒழுங்குபடுத்தவும் ஓர் அமைப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்ததற்காக உயிரியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ.ப்ருன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டது.

* குவாண்டம் ஊடுருவலை நிரூபித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), பிரான்ஸைச் சேர்ந்த மிஷேல் டெவோரே (Michel Devoret), அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம். மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டது.

* உறிஞ்சும் தன்மை கொண்ட உலோக-கரிமக் கட்டமைப்புப் பொருள்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த தற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு, கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுசுமு கிடகாவா (Susumu Kitagawa), மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் (பெர்க்லி) சேர்ந்த ஒமர் யாகி (Omar M. Yaghi) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு (Laszlo Krasznahorkai) அளிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு (Maria Corina Machado) அளிக்கப்பட்டது.

* தொழில்நுட்பம், புதுமை, மனித முயற்சி ஆகியவை நீடித்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது குறித்து விளக்கியதற்காகப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜோயல் மோகிர் (Joel Mokyr), கனடாவைச் சேர்ந்த பீட்டர் ஹோவிட் (Peter Howitt), பிரான்ஸைச் சேர்ந்த பிலிப் அக்யோன் (Philippe Aghion) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

* கணிதத்துக்கான நோபல் பரிசு என்றழைக்கப்படும் ஏபெல் பரிசு 2025 - ஜப்பான் கணித மேதை மசாகி காசிவராவுக்கு வழங்கப்பட்டது.

2025 ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது:

* மாலத்தீவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஷாஹினா அலி, பிலிப்பைன்ஸை சேர்ந்த கத்தோலிக்கப் போதகரும் சமூக ஆர்வலருமான பிளவி வில்லனு வேவா, ராஜஸ்தானைச் சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பிரிவில் ரமோன் மகசேசே விருது பெறும் இந்தியாவைச் சேர்ந்த முதல் தொண்டு நிறுவனம் இது.

புக்கர் பரிசு:

* ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதைத் தொகுப்புக் காகக் கன்னட எழுத் தாளர் பானு முஸ்தாக் சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றார். முதல் முறையாக சிறுகதைத் தொகுப்புக்காகப் புக்கர் விருது வழங்கப்பட் டுள்ளது.

சாகித்ய அகாடமி விருதுகள்:

* எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் - சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நாவலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் பெற்றார்.

* லட்சுமிஹர் - ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றார்.

தேசிய விளையாட்டு விருதுகள்:

* 2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் 2025 ஜனவரி 17ஆம் தேதி வழங்கப்பட்டன. இதில் 4 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருதும், 34 பேருக்கு அர்ஜூனா விருதும், 5 பேருக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட்டன.

* குகேஷ் டி (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்), மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்) ஆகிய நால்வருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப் பட்டது.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா பாட்மிண்டன்), நித்ய சுமதி சிவன் (பாரா பாட்மிண்டன்), மணிஷா ராமதாஸ் (பாரா பாட்மிண்டன்), அபய் சிங் (ஸ்குவாஷ்) ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

71ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்:

2023இல் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இந்தியத் திரைப் படங்களுக்கான தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

* நடிகர் மோகன் லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும், அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதும், நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணைநடிகருக்கான விருதும், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ‘வாத்தி’ படத்துக்காகச் சிறந்த இசைக்கான விருதும் வழங்கப்பட்டன.

துவ்வூர் நாகேஸ்வர் ரெட்டி, ஜகதீஷ் சிங் கேஹர், குமுதினி ரஜினிகாந்த், லக்ஷ்மிநாராயண சுப்பிரமணியன், எம்.டி. வாசுதேவன் நாயர், ஒசமு சுசுகி, சார்தா சின்ஹா

கிராமி விருதுகள்:

* 2025ஆம் ஆண்டுக்கான கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்றது. இதில், ‘சிறந்த தற்கால இசை ஆல்பம்’ பிரிவில் ‘திரிவேணி’ என்கிற இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பாடகி சந்திரிகா டாண்டன் (71) விருது பெற்றார்.

பத்ம விருதுகள்:

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டன.

* மருத்துவத் துறையில் தெலங் கானாவைச் சேர்ந்த துவ்வூர் நாகேஸ்வர் ரெட்டி, பொதுவிவகாரத்தில் சண்டிகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர், கலைத் துறையில் குஜராத்தைச் சேர்ந்த குமுதினி ரஜினிகாந்த் லக்கியா, கர்நாடகத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயண சுப்பிரமணியன், இலக்கியம் & கல்வியில் கேரளத்தைச் சேர்ந்த எம்.டி. வாசுதேவன் நாயர் (அமரர்), வணிகம் & தொழில் துறையில் ஜப்பானைச் சேர்ந்த ஒசமு சுசுகி (அமரர்), கலைத் துறையில் பிஹாரைச் சேர்ந்த சார்தா சின்ஹா (அமரர்) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் குமார் (கலை), நல்லி குப்புசாமி செட்டி (வணிகம் & தொழில்), ஷோபனா சந்திரகுமார் (கலை) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், குருவாயூர் துரை (கலை), செஃப் கே.தாமோதரன் (மற்றவை சமையல் துறை), -லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கி யம் & கல்வி இதழியல்), எம்.டி. ஸ்ரீனிவாஸ் (அறிவியல் & பொறியியல்), புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு), ஆர்.ஜி.சந்திரமோகன் (வணிகம் & தொழில்), ராதாகிருஷ்ணன் தேவ சேனாபதி (கலை), சீனி. விஸ்வநாதன் (இலக்கியம் & கல்வி), வேலு ஆசான் (கலை) ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT