உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் @ 2025 | மறக்க முடியுமா?

உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் @ 2025 | மறக்க முடியுமா?
Updated on
4 min read

* திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* திருவள்ளூர் மாவட்டம் திருவாலங் காடு களம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

* போராட்டம் என்கிற பெயரில் நடை பாதை, சாலையை மறித்துப் போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

* அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழகக் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில், கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.

* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் குற்றப் பத்திரிகைகள் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்கிற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

* நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சட்ட விரோதமாகத் தாது மணலைக் கடத்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.5,832 கோடியை வசூலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றாத மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* அரசியல் கட்சிகள், பிற அமைப்புகளின் நிகழ்வுகளுக்குச் சாலையோரங்களில் தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருபவரிடம் கொடிக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்யத் தடைகோருவது பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

* பார் கவுன்சில், மருத்துவ கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள முக்கிய அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று அறிவிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* ஊட்டி, கொடைக்கானலைப் போல வால்பாறைக்குச் செல்ல 2025, நவ.1 முதல் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* கோயில் நிதியிலிருந்து வணிக வளாகம் கட்டக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* தொல்லியல் சிறப்புமிக்க, பழமையான, புராதனக் கோயில்களைப் பாதுகாக்கப் பிரத்யேகத் தனி ஆணையத்தை அமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு டிடிசிபி ஒப்புதலுடன் நிரந்தரத் தொடர் அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தைப் பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாதச் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

* அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யத் தடையாக இருக்கும் விதிகளைத் தமிழக அரசு மறுஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

* மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவைக் கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப் படும் நபர், குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவருக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்த உத்தரவிடக் கூடாது என்று கீழமை நீதி மன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம்-மதுரைக் கிளை:

* கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப் பிரதட் சிணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாகத் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.

* திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், உரிய முடிவு எடுக்க வழக்கு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

* திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதை சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

* தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

* நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மதுரைக் கிளை பரிந்துரை செய்தது.

* கோயில் சொத்துகளை ஆக்கிரமிப் பாளர்களிடம் இருந்து மீட்டு அவற்றைக் கோயில்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

* கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

* தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர் களுக்கு மதுபானம் விற்றால், அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது.

* ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டபூர்வ மானவை அல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

* தமிழகத்தில் தெருக்களுக்குச் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் - தென் மண்டலம்:

* நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளைக் கேரள அரசே அகற்ற வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டது.

* தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

* கடல் ஆமைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரி வான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

* தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மாற்றுப் பொருள் களில் பால் நிரப்பி வழங்குவது குறித்து பரிசோதித்துப் பார்க்க இருப்பதாகத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

நீதிமன்றங்கள்:

* 2022இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலின் முன் தள்ளிவிட்டு, கொலை செய்த இளைஞர் சதீஷுக்கு தூக்குத் தண்டனை வழங்கி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பாலி யல் தொல்லை கொடுத்து ரயிலிலிருந்து கர்ப்பிணியைக் கீழே தள்ளிவிட்ட இளைஞ ருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* சென்னை குன்றத்தூர் அருகே 2 குழந்தைகளைக் கொலை செய்த தாய், ஆண் நண்பருக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்கள், புடவைகள் உள்ளிட்ட பொருள்

களைப் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கின.

* ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* 2006-11 காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியகருப்பன் உள்பட 4 பேரை விடுவித்து சிவங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

* சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞான சேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் @ 2025 | மறக்க முடியுமா?
‘பராசக்தி’ பேசும் அரசியல்: சிவகார்த்திகேயன் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in