முதன்முதலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக் காக நான்காம் நூற்றாண்டில் பாடல் பதிவு செய்யப்பட்டது. கி.பி.336ம் ஆண்டில் லத்தீன் மொழியில் ஜீசஸ் ரிஃபுல்சிட் ஓம்னியம் அதாவது இயேசு அனைத்தையும் ஒளிரச் செய்கிறார் என்ற பாடல் இயற்றப்பட்டது.
பின்னர் 16ம் நூற்றாண்டில் வேல்ஸ் நாட்டில் டெக் தி ஹால்ஸ் என்ற பாடலும், 1719ம் ஆண்டில் பைபிளின் வசனங்களை அடிப்படையாக கொண்டு ஐசக் வாட்டஸ் எழுதிய ஜாய் டு தி வர்ல்டு (Joy to the World) பாடலும் இயற்றப்பட்டது.
1818ம் ஆண்டு ஆஸ்திரியாவின் ஒபர்ண்டார்ஃப் என்ற ஊரில் சைலன்ட் நைட் என்ற பாடல் உருவாக்கப்பட்டது. ஆப்ரஹாம் மோக் என்ற பாதிரியார் இசை அமைக்க, ஜோசஃப் மோர் என்பவரின் வரிகளில் இந்த பாடல் உருவாக்கப்பட்டது.
இந்த பாடல் முதலில் பாடப்படும் போது தேவாலயத்தில் இருந்த கீபோர்டு உறைந்த போனது அதை சரிசெய்ய இயலவில்லை. எனவே, மெட்டல் கிட்டார் போன்ற சரம் கருவிகள் கொண்டு இசைக்கப்பட்டது.
இன்று 140க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த பாடல் பாடப்படுகிறது. 1857ம் ஆண்டு அமெரிக்காவின் ஜேம்ஸ் பியர்ட் லோர்ட் என்பவர் எழுதிய ஜிங்கில் பெல்ஸ் என்ற பாடல் முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகைககாக உருவாக்கப் பட்டது அல்ல.
அமெரிக்காவில் கொண்டாடப்படும் தேங்க்ஸ் கிவிங் பண்டிக்கைக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த பாடலில் உள்ள ஒன் ஹார்ஸ் ஒபென் ஸ்லீக் (One horse open sleigh) என்ற வரிகிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனத்தை ஒப்பிடும் வகையில் இருந்ததால் தற்போது உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ஹிட் பாடலாக உள்ளது. இந்தப் பாடல்கள் காலத்தைத் தாண்டி, கிறிஸ்துமஸ் சூழலை உணர்த்துகின்றன. அவற்றின் கதைகள் இசையை மேலும் அழகாக்குகின்றன.