தாக்கர்(செனகல்): செனகல் நாட்டின் தாக்கர் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் 50 கிலோ பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லாய்ரென்லாக்பம் அம்பேகர் மீட்டேய் முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் அம்பேகர் மீட்டேய் 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் இஸ்ஸான் ஜெப்ரி கலீயா அரேவலோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். மணிப்பூரைச் சேர்ந்த அம்பேகர் மீட்டேய், பாட்டியாவிலுள்ள தேசிய விளையாட்டு இன்ஸ்டியூட்டில் (என்ஐஎஸ்) பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.