எம்.எஸ்.தோனி
பெங்களூரு: ஐபிஎல் 2027 கிரிக்கெட் சீசனில் விளையாடுவது குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்ய உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த தனியார் நிகழ்வில் சனிக்கிழமை அன்று தோனி பங்கேற்றார். அப்போது இதனை அவர் தெரிவித்தார்.
“ஐபிஎல் 2027 சீசனில் நான் விளையாடுவது குறித்த முடிவை டிசம்பர் மாதம் அறிவீர்கள். நான் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன் முடிவுகள் எனக்கு கிடைக்க வேண்டும். அதைப் பொறுத்தே அடுத்த சீசனில் நான் விளையாடுவதற்கான உடல் தகுதியை பெற்றுள்ளேனா என்பது தெரியவரும்.
ஒருவேளை நான் போதுமான உடல் தகுதியை பெறாவிட்டால், பழைய வாகனமான என்னை சரி செய்து, மீண்டும் சாலையில் இயங்கச் செய்யும் பொறுப்பு மருத்துவர்கள் உடையது” என்று தோனி தெரிவித்துள்ளார்.
45 வயதான தோனி, கடந்த ஐபிஎல் சீசன் முழுவதையும் காயம் காரணமாக தவறவிட்டார். சிஎஸ்கே அணி 2023 சீசனுக்கு பிறகு பிளே - ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 2024 முதல் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செய்யப்பட்டு வருகிறார்.
ஐந்து முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே அணி, எதிர்வரும் சீசனில் புதிய பயிற்சியாளருடன் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் வரும் சீசனில் தோனியின் பங்கு சிஎஸ்கே அணியில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.