விளையாட்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசல்

செய்திப்பிரிவு

லிங்கன்: இந்​தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி லிங்​கன் நகரில் உள்ள பெர்ட் சட்​கிளிஃப் ஓவல் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.

முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்​வால், சாய் சுதர்​சன் ஜோடி சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தது.

மட்டையை சுழற்​றிய யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 138 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் விளாசிய நிலை​யில் டான்ரு ஃபெர்ன்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முதல் விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 46.3 ஓவர்​களில் 175 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய தேவ்​தத் படிக்​கல் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் மெக்கே பந்​தில் வெளியேறினார். இந்​தியா ‘ஏ’ அணி 69.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 227 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

தொடர்ந்து மழை பெய்​ததால் முதல் நாள் ஆட்​டம் முடித்​துக் கொள்​ளப்​பட்​டது. சாய் சுதர்​சன் 205 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும், கேப்​டன் துருவ் ஜூரல் 12 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT