புதுடெல்லி: அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை 5-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
போட்டியில் நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி.வாரியர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும். வதோதரா, மும்பை மைதானங்களில் தலா 11 ஆட்டங்கள் நடைபெறும்.
ஜனவரி 14-ம் தேதி தொடக்க ஆட்டம் வதோதரா மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி), மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதும்.
வதோதராவில் ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறும் லீக் போட்டிகள் நடைபெறும். அதன் பின்னர் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் எஞ்சிய லீக், பிளே-ஆப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியும் பிராபோர்ன் மைதானத்திலேயே நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.