புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலக சீனியர் பளுதூக்குதல் போட்டி 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம்( ஐடபிள்யூஎஃப்) இத்தகவலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவின் நிங்போ நகரில் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் 2029-ல் உலக பளுதூக்குதல் போட்டி நடைபெறும் நகரை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி அகமதாபாத் நகரம், இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
முதன்முறையாக உலக பளுதூக்குதல் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2030-ம் ஆண்டில் உலக பளுதூக்குதல் போட்டி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.
மேலும், 2028-ம் ஆண்டு உலக இளையோர் பளுதூக்கும் போட்டி கொசாவாவிலுள்ள பிரிஷ்டினா நகரிலும், உலக ஜூனியர் பளுதூக்கும் போட்டி வெனிசுலா நாட்டின் கராகஸ் நகரிலும் நடைபெறவுள்ளது.