புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் தங்களது அணியில் வீரர்களை மாற்றங்களைச் செய்ய ஐசிசி கெடு விதித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை அறிவித்து விட்டன. இன்னும் சில நாடுகள் தங்களது அணிகளை இன்னும் அறிவிக்காமல் உள்ளன. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்கள் அணியில் உள்ள வீரர்களை மாற்றலாம் என ஐசிசி கெடு விதித்துள்ளது.