சென்னை: உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, எகிப்து அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார் 7-1, 7-3, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் இப்ராஹிம் எல்காப்னியை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் அனஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என்ற கணக்கில் நூர் ஹெய்கலை தோற்கடித்தார். அபய் சிங் 7-5, 6-7, 7-5, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஆடம் ஹவாலைச் சாய்த்தார்.
ஜோஷ்னா சின்னப்பா, நார்டைன் கராஸ் ஆகியோரிடையிலான ஆட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து 3-0 என்ற கணக்கில் இந்தியா, எகிப்து அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இறுதிச் சுற்றில் இந்தியா, ஹாங்காங் அணியுடன் மோதவுள்ளது.