பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே பாரம்பரியமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் உள்ள தி காபா மைதானத்தில் நாளை (4-ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி நேற்று அறிவித்தது.
இதில் காயம் அடைந்துள்ள மார்க் வுட்டுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வில் ஜேக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வில் ஜேக்ஸ் 3 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார்.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், வில் ஜேக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.