விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இந்திய மகளிர் அணி?

செய்திப்பிரிவு

டர்பன்: இந்தியா மகளிர் - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 47, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36, ஷபாலி வர்மா 34 ரன்கள் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் அயபோங்கா 3 விக்கெட்களையும், துமி சேகுக்குனே 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 158 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 19.1-வது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புகு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் லாரா வால்வார்ட் 51, அன்னெரி டெர்க்சன் 44 ரன்கள் விளாசினர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது போட்டியில் இரு அணிகளும் அதே மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT