விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி ஏன்? - கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்​று​முன்​தினம் அகமதாபாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்கா​விடம் தோல்வி அடைந்​தது.

188 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 111 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பவர்​பிளே​வில் இஷான் கிஷன் (0), திலக் வர்மா (1), அபிஷேக் சர்மா (15) ஆகியோர் விரை​வாக ஆட்​ட​மிழந்​த​தால் இந்​திய அணி​யால் மீள​முடியாமல் போனது.

போட்டி முடிவடைந்​ததும் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்யகு​மார் யாதவ் கூறிய​தாவது: பந்​து​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் நாங்​கள் சிறப்​பாகவே செயல்​பட்​டோம். 20 ரன்களுக்கு எல்​லாம் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினோம். அதன் பிறகு 7 முதல் 15 ஓவர்​கள் வரை தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் பேட்​டிங்​கில் சிறப்​பாக செயல்​பட்​டனர்.

          

ஆனால் அதன் பின்​னர் நாங்​கள் இறு​திப் பகு​தி​யில் மீண்டும் ஆட்​டத்​துக்​குள் வந்​தோம். எனினும் ஒட்டுமொத்தமாக, நாங்​கள் நன்​றாகவே பந்து வீசினோம். ஆனால், பேட்​டிங்​கில் நாங்​கள் சிறப்​பாக செயல்​பட்​டிருக்க வேண்​டும்.

180 முதல் 185 ரன்​கள் இலக்கை துரத்​தும் போது ஆட்​டத்தை பவர்​பிளே​வில் வெல்ல முடி​யாது. ஆனால் பவர் பிளே​வில் ஆட்​டத்தை இழக்க நேரிடும். பவர் பிளே​வில் நாங்​கள் அதிக விக்​கெட்​டு​களை இழந்​தோம். 180 முதல் 185 ரன்​கள் இலக்கை துரத்​தும் போது நாங்​கள் விரும்​பியபடி சிறிய அளவி​லான பார்ட்​னர்​ஷிப் கூட அமைய​வில்​லை. ஆனால் அது விளை​யாட்​டின் ஒரு பகு​தி​யாகும். அதிலிருந்து நாங்கள் கற்​றுக்​கொள்​வோம்.

ஒன்​றாக அமர்ந்து ஆலோ​சித்து வலு​வாக மீண்டு வருவோம். ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் வேகக்​கூட்​டணி மிக​வும் ஆபத்​தானது என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். இரு​வரும் ஏற்​கெனவே இணைந்து விளை​யாடி​யுள்​ளனர்.

அவர்​கள் கூட்​டாக 8 ஓவர்​களை வீசி 43 ரன்​களை மட்​டுமே வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இரு​வரும் பார்ட்​னர்​ஷிப் அமைத்து சிறப்​பாக பந்து வீசி​னார்​கள். அதைத்​தான் நாங்​கள் அவர்​களிட​மிருந்து விரும்​பு​கிறோம். இரு​வரும் அனுபவம் வாய்ந்​தவர்​கள், அவர்​கள் அணி​யில் இருப்​பது சிறப்​பான விஷ​யம்.

ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக அடுத்து நடை​பெற உள்ள ஆட்​டத்​தில் பேட்​டிங், பந்​து​வீச்​சு, பீல்​டிங் என அனைத்திலும் சிறப்​பாக செயல்​படு​வோம் என்ற நம்​பிக்கை உள்​ளது. விஷ​யங்​களை எளிமை​யாக வைத்திருக்க முயற்​சிப்​போம், நாங்​கள் விளை​யாட விரும்பும் அதே பிராண்ட் கிரிக்​கெட்டை விளையாடுவோம், எது​வும் மாறாது. நாங்​கள் வலு​வாக மீண்டு வரு​வோம்​. இவ்​வாறு அவர் ​கூறி​னார்.

SCROLL FOR NEXT