2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போது ரிட்டையர் ஆகிவிட்ட இரண்டு இந்திய லெஜெண்ட்கள்தான் டி20 உலகக்கோப்பைகளில் அதிக ரன்களை எடுத்தவர்களாக உள்ளனர்.
வேறு யார்? நம் கிங் கோலிதான் 2012-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் 1, 292 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா இவர் 1220 ரன்களை எடுத்து 2ம் இடத்தில் இருக்கிறார். ஆகவே ரோ-கோ தான் இதிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் மகேலா ஜெயவர்தனே 1016 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் சர்மா 9 டி20 உலகக்கோப்பைகளிலும் ஆடியுள்ளார். இப்போது ஓய்வு பெற்று விட்டார். 2024 பிரிட்ஜ்டவுன் கோப்பைக் கனவு நிறைவேறிய போட்டிதான் ரோ-கோவிற்கு கடைசி டி20 ஆக அமைந்தது.
இப்போது விளையாடும் வீரர்களில் இந்த 2026 உலகக்கோப்பை டி20 தொடர் அணியில் விளையாடப்போகும் வீரர் ஜாஸ் பட்லர் மட்டுமே மேற்கண்ட வரிசையில் டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பவர். இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் ஜாஸ் பட்லர் 1013 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஃபார்மில் இருந்தால் கோலி, ரோஹித்தை பீட் செய்ய முடியும்.
இந்த நால்வருக்குப் பிறகே ஆயிரம் டி20 உலகக்கோப்பை ரன்களை எட்டாமல் முடிந்த வார்னர், கெய்ல், தில்ஷன், ஷாகிப் அல் ஹசன், கேன் வில்லியம்சன், ஏ.பி.டிவில்லியர்ஸ் என்ற வரிசையில் உள்ளனர்.
அதிக விக்கெட்டுகள்: அதே போல் டி20 உலகக்கோப்பைகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் ஷாகிப் உல் ஹசன் 2007-2024 வரை 43 போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரீடி 39 விக்கெட்டுகளை எடுத்து 2ம் இடத்திலும் 38 விக்கெட்டுகளுடன் மலிங்கா 3ம் இடத்திலும் 37 விக்கெட்டுகளுடன் ஹசரங்கா 4ம் இடத்திலும் உள்ளனர், இப்போது ஆடும் வீரர்களில் ஆப்கானின் உலக நம்பர் 1 லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் 37 விக்கெட்டுகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் அஸ்வின் 32 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.