விளையாட்டு

இந்திய பந்து வீச்சாளர்கள் கோட்டை விட்டது எங்கே? - வெலிங்டன் டெஸ்ட்

செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்​துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு பல​வீனம் மீண்​டும் வெளிப்​பட்​டது. ஜஸ்பிரீத் பும்ரா மட்​டுமே சிறப்​பாகப் பந்​து​வீசி நியூஸிலாந்து பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி கொடுத்​தார். மற்ற பந்​து​வீச்​சாளர்​கள் விக்​கெட்​டுகளை வீழ்த்​தத் தடு​மாறினர்.

70 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை பறிகொடுத்​ததால் நியூஸிலாந்து அணியை குறைந்த ரன்​களில் சுருட்​டுவதற்​கான வாய்ப்பு இந்​தி​யா​வுக்கு உரு​வானது. ஆனால், இந்​திய பந்​து​வீச்​சாளர்​களின் திறன் குறைபாடும், 30-வது ஓவருக்​குப் பிறகு கூகபுரா பந்​தின் பளபளப்பு குறைந்​ததும் ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றின.

17 ஓவர்களை வீசி 52 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​டுகளை வீழ்த்​திய பும்ரா, ஹென்றி நிக்​கோல்​ஸுக்கு பலமுறை நெருக்​கடி கொடுத்​தார். ஆனால், அவரை ஆட்​ட​மிழக்​கச் செய்ய முடிய​வில்லை. பந்து பழைய​தாக மாறிய பிறகும் பும்ரா மட்​டுமே விக்​கெட் வீழ்த்​தும் முனைப்​புடன் செயல்​பட்​டார்.

‘ஏகே-47’ என்று செல்​லமாக அழைக்​கப்​படும் அன்​ஷுல் காம்​போஜ் (18 ஓவர்​களில் 57 ரன்​கள், 1 விக்​கெட்) தொடக்​கத்​தில் ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினாலும், தொடர்ந்து தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்லை. தொடக்க வீரர் டெவன் கான்வே மோச​மான ஷாட் ஆடியதே அந்த விக்​கெட் கிடைக்க முக்​கியக் காரண​மாக இருந்​தது.

ஸ்​டெம்​பு​களை நோக்கி கட்​டுப்​பாட்​டுடன் பந்​து​வீசுவது மட்​டும் விக்​கெட்​டுகளைப் பெற்​றுத்​த​ராது என்​பதை காம்​போஜ் உணர்ந்​தார். அவரது பந்​து​வீச்​சில் வேகமும் குறைவாக இருந்​தது. சராசரியாக மணிக்கு 128 முதல் 130 கி.மீ. வேகத்​தில் மட்​டுமே பந்​து​வீசிய​தால் அவ​ரால் பேட்​ஸ்​மேன்​களுக்கு பெரிய சவால் ஏற்​பட​வில்லை.

மறு​புறம், பிரசித் கிருஷ்ணா (16 ஓவர்​களில் 58 ரன்​கள், விக்​கெட் இல்லை) தொடர்ந்து மிகவும் ஃபுல்​லாகவோ அல்​லது ஷார்ட்​டாகவோ பந்​து​வீசி ரன்​களை வாரி வழங்​கினார். ஆகாஷ் தீப் (16 ஓவர்​களில் 33 ரன்​கள், 1 விக்​கெட்) சில சிறப்​பான பந்​துகளை வீசினார். இருப்​பினும், பும்​ராவைப் போல தொடர்ந்து அச்​சுறுத்​தலை ஏற்​படுத்த முடிய​வில்லை.

மதிய உணவு இடைவேளைக்​குப் பிறகு கிளென் பிலிப்ஸ் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டார். இத​னால் மறுமுனை​யில் ஹென்றி நிக்​கோல்​ஸுக்கு நம்​பிக்கை ஏற்​பட்டு தனது இயல்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தத் தொடங்​கினார்.

நிக்​கோல்ஸை ஷார்ட் பால்​களில் திணறடிக்க ஷுப்​மன் கில் 6 வீரர்​களை லெக் திசையில் நிறுத்தி வியூகம் அமைத்​தார். ஆனால், காம்​போஜின் வேகம் குறைந்த பந்​துகளால் அந்​தத் திட்​டம் பலனளிக்​க​வில்லை.

இந்​திய அணி ஏற்​கெனவே ஒரு​முறை காம்​போஜுக்கு வாய்ப்​பளித்​திருந்​தது. அப்​போதும் அவர், அதனை சரியாக பயன்​படுத்​திக் கொள்​ளவில்லை. தற்​போதும் அதே தவறை செய்​துள்​ளார். இதற்கு முகமது சிராஜை களமிறக்கி இருக்​கலாம் என ரசிகர்​கள் ஆதங்​கப்​பட்​டனர்.

சதம் விளாசிய பின்​னர் ஹென்றி நிக்​கோல்ஸ், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்​தில் கேட்ச் கொடுக்​கும் நிலை ஏற்​பட்​டது. ஆனால், ரிஷப் பந்த், தேவ்​தத் படிக்​கல் இடையே ஏற்​பட்ட புரிதல் குறைவால் தேவ்​தத் படிக்​கல் அந்த கேட்சை சரியாகக் கணிக்​கத் தவறினார். இத​னால் ஹென்றி நிக்​கோல்ஸ் ஆட்​ட​மிழப்​ப​தில் இருந்து தப்​பித்​தார்.

மொத்​தத்​தில், ஆடுகளத்​தில் ஆரம்​பத்​தில் இருந்த ஈரப்​ப​தம் காய்ந்த பிறகு பந்​து​வீச்​சாளர்​களின் திறமையே முக்​கிய​மானதாக இருந்​தது. இந்த சூழ்​நிலை​யில் பும்ரா மட்​டுமே அழுத்​தம் கொடுத்​தார். இந்​திய அணி​யின் மற்ற பந்​து​வீச்​சாளர்​கள் அவருக்கு உரிய ஒத்​துழைப்பை அளிக்​கத் தவறினர். 2-வது நாளான இன்று முதல் செஷன் ஆட்​டம் முக்​கியத்​து​வம் பெறக்​கூடும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT