சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் 23-ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், நாளை (நவ.21) வட கடலோர தமிழகத்தில் லேசான மழையும், 22-ம் தேதி கடலோர தமிழகத்தில் மிதமான மழையும், 23-ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.