மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்​த ​போஸ்

 
விளையாட்டு

கொல்​கத்தா மைதானத்​தில் மேற்கு வங்க ஆளுநர் ஆய்வு

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: ரசிகர்​கள் ரகளை​யில் ஈடு​பட்ட கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் நேற்று மேற்கு வங்க ஆளுநர் சி.​வி. ஆனந்​த​போஸ் ஆய்வு நடத்​தி​னார்.

கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்ஸி பங்​கேற்​றார். அப்​போது மைதானத்​தில் அவரை சரிவர காண முடி​யாத​தா​லும், அவர் நிகழ்ச்​சியி​லிருந்து பாதி​யில் புறப்​பட்​டுச் சென்​ற​தா​லும் ரசிகர்கள் மைதானத்​தில் இறங்கி ரகளை​யில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்து இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்​து​மாறு மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில் ரகளை நடந்த மைதானத்​துக்கு மேற்கு வங்க ஆளுநர் சி.​வி.ஆனந்த போஸ் வந்து ஆய்வு நடத்​தி​னார். அவருடன் தலை​மைச் செயலர் மனோஜ் பந்த் உள்​ளிட்​டோர் வந்​திருந்​தனர்.

அப்​போது ஆளுநர் கூறும்​போது, “மெஸ்ஸி பங்​கேற்ற நிகழ்ச்​சி​யில் விதி​முறை​களை அரசு கடைப்​பிடிக்​க​வில்​லை. இதுதொடர்​பாக நீதி விசா​ரணைக்கு அரசு உத்​தர​விட வேண்​டும். சம்​பவத்​துக்கு காரண​மான அனை​வரும் கைது செய்​யப்பட வேண்​டும். மேலும் நிகழ்ச்​சிக்​காக வசூலிக்​கப்​பட்ட டிக்​கெட் தொகையை ரசிகர்​களுக்கு உடனடி​யாக திருப்​பித் தரவேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT