விளையாட்டு

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்: வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜப்​பானில் சமீபத்​தில் முடிவடைந்த 20-வது ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​தியா 21 தங்​கம், 27 வெள்​ளி, 37 வெண்​கலம் என மொத்​தம் 85 பதக்​கங்​களை வென்று பட்​டியலில் 4-வது இடத்தை பிடித்​திருந்​தது.

இந்​நிலை​யில் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற இந்​திய வீரர், வீராங்​க​னை​களைப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். டெல்​லி​யில் உள்ள மேஜர் தயான் சந்த் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற சந்​திப்​பில், ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்ற ஆடவர் மற்​றும் மகளிர் கிரிக்​கெட் அணி​யினரும் பங்​கேற்​றனர்.

இந்த சந்​திப்​பின்​போது, வீரர்​கள் கையொப்​பமிட்ட ஜெர்​சிகள் உள்​ளிட்ட நினை​வுப் பரிசுகள் பிரதமர் மோடிக்கு வழங்​கப்​பட்​டன. மேலும், வில்​வித்​தை​யில் அசத்​திவரும் 17 வயதான கும்​கும் மோஹோட், தான் பயன்​படுத்​தும் வில்​லை​யும் பிரதமருக்கு நினை​வுப் பரி​சாக வழங்​கி​னார். சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) தலை​வர் ஜெய் ஷா, இந்​திய ஒலிம்​பிக் சங்க தலை​வர் பி.டி.உஷா உள்​ளிட்ட பல்​வேறு விளை​யாட்டு அமைப்​பு​களின் உயர் அதி​காரி​களும் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது:

140 கோடி இந்​தி​யர்​களும் பெருமை கொள்​ளும் வகை​யில் நீங்​கள் சாதனை படைத்​துள்​ளீர்​கள். மூவர்​ணக் கொடியை உலக அரங்​கில் உயரப் பறக்​கச் செய்​வதே மிகப் பெரிய வெற்​றி​யாகும். எனவே, உங்​களது வெற்றி உங்​களுக்கு மட்​டுமே சொந்​த​மானதல்ல, கோடிக்​கணக்​கான இந்​தி​யர்​களுக்​கும் சொந்​த​மானது. ஒட்​டுமொத்த நாட்​டின் சார்​பில் உங்​களுக்கு எனது வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்​தி​யா​வுக்கு 38 பதக்​கங்​களைப் பெற்​றுத் தந்த நமது வீராங்​க​னை​களுக்​குச் சிறப்​புப் பாராட்​டு​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். நீங்​கள், 11 தங்​கப் பதக்​கங்​கள் வென்று கொடுத்​துள்ளீர்கள். சர்​வ​தேச விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​கான நம்​பக​மான மற்​றும் சிறந்த விருந்​தோம்​பல் அளிக்​கும் நாடாக இந்​தியா உரு​வெடுத்து வரு​கிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டிகளை நடத்​து​வதற்கு இந்​தியா விண்​ணப்​பித்​துள்​ளது. அந்​தப் போட்​டியை இந்​தி​யா​வில் நடத்த வேண்​டும் என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கிறோம்.

44 ஆண்​டு​கால காத்​திருப்​புக்​குப் பிறகு மகளிர் ஹாக்கி அணி தங்​கப் பதக்​கம் வென்​றிருப்​பது மிக​வும் பாராட்​டத்​தக்​கது. கனவு​களை ஒரே நாளில் அடைந்​து​விட முடி​யாது. அதற்​குப் பல ஆண்​டு​கள் கடின உழைப்​பும் அர்ப்​பணிப்​பும் தேவை. கடந்த 12 ஆண்​டு​களில், இந்​தியா பொறுமை​யுடன் செயல்​பட்​டு, விளை​யாட்​டுத் துறைக்​கான கட்​டமைப்பை உரு​வாக்​க கடுமை​யாக உழைத்​துள்​ளது.

ஒரு காலத்​தில், சர்​வ​தேச அளவி​லான பெரிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் இந்​தியா வெகு சில பதக்​கங்​களையே வெல்​லும். நாட்​டில் இத்​தனை வகை​யான விளை​யாட்​டு​கள் இருப்​பது​கூட பலருக்​குத் தெரி​யாது.

இந்த எதிர்​மறை​யான மனநிலையை மாற்ற வேண்​டும் என்று நாங்​கள் உறு​தி​யேற்​றோம். அதன் விளை​வாக, உலகளா​விய விளை​யாட்​டு அரங்​கில்​ இந்​தி​யா​வின்​ பங்​கேற்​பு அதி​கரித்​து வரு​கிறது. தற்​போது விளை​யாட்​டுத் துறை​யில்​ வெளிப்​படை​யான நடை​முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT