விளையாட்டு

“கடின உழைப்பு, பயிற்சியால் வெற்றி” - விராட் கோலி

செய்திப்பிரிவு

பெங்களூரு: எனது கடின உழைப்​பு, தீவிர பயிற்​சியே வெற்​றிக்​குக் காரணம் என்று ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி​யின் நட்​சத்​திர வீரர் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்​டம் நேற்று முன்​தினம் இரவு பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. இதில் 6 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் பெங்​களூரு அணி வெற்றி கண்​டது.​ முதலில் விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி, 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்​தது. இதைத் தொடர்ந்து விளை​யாடிய பெங்​களூரு அணி 15.4 ஓவர்​களி​லேயே 4 விக்​கெட் இழப்​புக்கு 203 ரன்​கள் குவித்து வெற்றி கண்​டது.

          

விராட் கோலி 38 பந்​துகளில் தலா சிக்​ஸர், பவுண்டரிகளுடன் 69 ரன்​களும், டிம் டேவிட் 16 ரன்​களும் எடுத்து ஆட்டமிழக்​காமல் இருந்​தனர். வெற்​றிக்​குப் பின்னர் விராட் கோலி கூறிய​தாவது: டி20 கிரிக்​கெட் போட்​டிகளுக்கு திரும்பி இருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. திரைமறைவுக்கு பின் கடுமை​யாக உழைத்து வரு​கிறேன். எனது உடல் தகு​தியை பாது​காக்க அதிக கவனம் செலுத்துகிறேன். கடின உழைப்​பு, தீவிர பயிற்​சியே வெற்றிக்​குக் காரணம். இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்​து​வேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சேஸிங்​கில் 4 ஆயிரம் ரன்​கள் குவித்த கோலி

ஐபிஎல் கிரிக்கெட் போட்​டிகளில் சேஸிங்​கின்​போது 4 ஆயிரம் ரன்​கள் குவித்த முதல் வீரர் என்ற பெரு​மையை விராட் கோலி பெற்​றுள்​ளார். நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் அவர் இந்த சாதனையைப் புரிந்​தார்.

மேலும் டி20 போட்​டிகளில் அதிக ரன்​கள் குவித்த வீரர்​கள் வரிசை​யில் 6-வது இடத்​தைப் பிடித்​தார். முன்​ன​தாக 6-வது இடத்​தில், பாகிஸ்​தான் வீரர் ஷோயிப் மாலிக் 13,571 ரன்​களு​டன் இருந்​தார். தற்​போது வி​ராட் கோலி, 13,612 ரன்​கள் குவித்து மாலிக்கை பின்​னுக்​குத்​ தள்​ளி 6-ம்​ இடத்​துக்​கு முன்​னேறி​னார்​.

SCROLL FOR NEXT