விளையாட்டு

ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக்​கொண்​டுள்ள இந்திய மல்​யுத்த வீராங்​க​னை​யான வினேஷ் போகத் வரும் 30 மற்​றும் 31-ம் தேதி​களில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்டு தகுதி போட்​டி​யில் பங்​கேற்க தன்னை அனு​ம​திக்க வேண்​டும் என டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

இந்த மனுவை டெல்லி உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி டி.கே. உபாத்​யா​யா, நீதிபதி தேஜாஸ் கரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து தீர்ப்​பளித்​துள்​ளது. அதில், “மகப்​பேறு விடுப்​பிலிருந்து திரும்​பி​யுள்ள வினேஷ் போகத் போன்ற புகழ்​பெற்ற வீராங்​க​னையைச் சிறப்​புக் கருணை​யுடன் இந்​தப் போட்​டிக்கு பரிசீலிக்க வேண்​டும். பிரபல வீராங்​க​னை​களுக்கு விதி​விலக்கு அளிக்​கும் வகை​யில் இந்த கொள்கை இருந்​திருக்க வேண்​டும். ஆனால், துர​திருஷ்ட​வச​மாக அந்​தக் கொள்​கை​யில் அந்த விதி​விலக்கு இல்​லை.

இருந்​த​போதும் அவர் ஆசிய விளை​யாட்டு தகு​திப் போட்​டி​யில் பங்​கேற்க நீதி​மன்​றம் உத்​தர​விடு​கிறது. மேலும், இந்​தத் தகு​திப் போட்​டி​யில் வினேஷ் போகத் பங்​கேற்​கும் விளை​யாட்டு நிகழ்ச்​சிகள் அனைத்​தை​யும் இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் வீடியோ​வில் பதிவு செய்​ய​வேண்​டும். அப்​போது இந்​திய ஒலிம்​பிக் சங்​கம், இந்​திய விளை​யாட்டு ஆணை​யம் ஆகிய​வற்​றின் தனிப்​பட்ட பார்​வை​யாளர் கட்​டா​யம் இருக்​கவேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

நேற்று முன்​தினம் இரவு இந்த உத்​தரவை டெல்லி உயர் நீதி​மன்​றம் வெளி​யிட்​டது. அது அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று காலை உயர் நீதி​மன்​ற இணை​யதளத்​தில்​ வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT