விளையாட்டு

மகா​ராஷ்டிர அணி​யிடம் உத்தராகண்ட் தோல்வி

செய்திப்பிரிவு

ஜெய்ப்​பூர்: விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் லீக் போட்டி​யில் மகா​ராஷ்டிர அணி 129 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் உத்தராகண்ட் அணியை வீழ்த்​தி​யது.

ஜெய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற இப்​போட்​டி​யில் மகா​ராஷ்டிர அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 331 ரன்​கள் எடுத்​தது. மகா​ராஷ்டிர அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 113 பந்துகளில் 124 ரன்​கள் குவித்​தார். பின்​னர் விளை​யாடிய உத்தராகண்ட் அணி 43.3 ஓவர்​களில் 202 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது.

அகர்​வால், படிக்​கல் சதம்: அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற மற்றொரு லீக் போட்​டி​யில் கர்​நாடக அணி 67 ரன்​கள் வித்தியாசத்தில் புதுச்​சேரி அணியை வீழ்த்​தி​யது. முதலில் விளையாடிய கர்​நாடக அணி 50 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்புக்கு 363 ரன்​கள் குவித்​தது.

மயங்க் அகர்​வால் 132 ரன்​களும், தேவ்​தத் படிக்​கல் 113 ரன்​களும் குவித்​தனர். கருண் நாயர் ஆட்​ட​மிழக்​காமல் 62 ரன்​கள் சேர்த்​தார். பின்​னர் விளை​யாடிய புதுச்​சேரி அணி 50 ஓவர்​களில் 296 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்து 67 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது.

புதுச்​சேரி அணி​யின் நெயன் ஷியாம் காங்​கயன் 68, ஜெயந்த் யாதவ் 54 ரன்​கள் சேர்த்​தனர். கர்​நாடக அணி​யின் மன்​வந்த் குமார் 3, வித்​வத் காவேரப்​பா, கருண் நாயர் ஆகியோர் தலா 2, அபிலாஷ் ஷெட்​டி, ஸ்ரீர்ஷா ஆச்​சார்​, ஸ்ரே​யாஸ்​ கோபால்​ ஆகியோர்​ தலா ஒரு விக்​கெட்​ வீழ்​த்​தினர்​.

SCROLL FOR NEXT