அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆந்த்ரே சித்தார்த் 70, இந்திரஜித் 48, பூபதி குமார் 27, முகமது அலி 46 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய திரிபுரா அணி 42.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் 6, வருண் சக்ரவர்த்தி 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.