புடாபெஸ்ட்: ஹங்கேரியில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான பிரிவில் இந்தியாவில் வேலவன் செந்தில்குமார் பட்டம் வென்றார்.
முன்னதாக, அரை இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த வீரர் சோட்ரானியுடன் மோதினார். இந்த மோதலில் வேலவன் செந்தில்குமார் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில்குமார், ஹங்கேரியின் பாலாஸ் ஃபர்காஸுடன் பலப்பரீட்சை மேற்கொண்டார்.
இதில் 11-4, 11-2, 11-3 என்ற செட் கணக்கில் பாலாஸ் ஃபர்காஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.