விளையாட்டு

கிரிக்கெட்: கால் இறுதி சுற்றில் வேலம்மாள் அணி

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னையை அடுத்த கவரப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறி​யியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டம் ஒன்​றில் ராமசந்​திரா - வேலம்​மாள் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்​மாள் அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 104 ரன்​கள் எடுத்​தது. எஸ்​.பி.சரண் 33 பந்​துகளில் 50 ரன்​கள் விளாசினார்.

          

105 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ராமசந்​திரா அணி 14 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 98 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வேலம்​மாள் அணி கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறியது.

மற்ற ஆட்​டங்​களில் எஸ்​எஸ்​என் கல்​லூரி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெங்​கடேஷ்வரா கல்​லூரி அணி​யை​யும், ராஜலட்​சுமி கல்​லூரி அணி 34 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பனிமலர் கல்​லூரி அணி​யை​யும், சவீதா கல்​லூரி அணி 34 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அண்ணா பல்​கலைக்​கழக அணியை​யும் தோற்​கடித்​தன. இன்று நடை​பெறும் கால் இறுதி சுற்று ஆட்​டங்​களில் ஆர்​எம்கே - வேலம்​மாள், லயோலா - சவீ​தா, ராஜலட்​சுமி - சத்​ய​பாமா பல்​கலைக்​கழகம், எஸ்​எஸ்​என் - சாய்​ராம் ஆகிய அணி​கள் மோதுகின்​றன.

SCROLL FOR NEXT