விளையாட்டு

வருண் சக்​ர​வர்த்​தி, சுனில் நரைன் அசத்தல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

செய்திப்பிரிவு

ஹைத​ரா​பாத்: ஐபிஎல் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின.

முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணிக்கு டிரா​விஸ் ஹெட் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் 4 பவுண்​டரி​களை விளாசி அசத்​தி​னார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விரட்​டி​னார் டிரா​விஸ் ஹெட்.

அதேவேளை​யில் நிதான​மாக விளை​யாடிய அபிஷேக் சர்மா 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் கார்த்​திக் தியாகி 144 கிலோ மீட்​டர் வேகத்​தில் பேக் ஆஃப் தி லென்ந்த்​தில் வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்​கெட் திசை​யில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனது.

முதல் விக்​கெட்​டுக்கு அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட் ஜோடி 3.4 ஓவர்​களில் 44 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து இஷான் கிஷன் களறிமிங்​கினார். கேமரூன் கிரீன் வீசிய 5-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​கள் அடித்​தார். மறு​புறம் கார்த்திக் தியாகி வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்​டார். இதனால் பவர்​பிளே​வில் ஹைத​ரா​பாத் அணி 71 ரன்​கள் குவித்​தது.

வருண் சக்​ர​வர்த்தி வீசிய 7-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய டிரா​விஸ் ஹெட் 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் விளாசிய நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். டீப் மிட்விக்​கெட் திசை​யில் டிரா​விஸ் ஹெட் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் செய்​தார். 2-வது விக்​கெட்​டுக்கு டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன் ஜோடி 61 ரன்​கள் சேர்த்​தது.

இதன் பின்​னர் அந்த அணி ஆட்​டம் கண்​டது. ஹெய்ன்​ரிச் கிளாசன் 11 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேமரூன் கிரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் விளாசி​னார். அப்​போது மின்​னல் வேகத்​தில் ஓடிவந்த ரோவ்​மன் பவல் அந்​தரத்​தில் பாய்ந்​த​படி டைவ் அடித்து கேட்ச் செய்​தார். இந்த கேட்ச் வியக்க வைக்​கும் வகை​யில் அமைந்​தது.

இதைத் தொடர்ந்து ரவிச்​சந்​திரன் சமரன் 4, அனிகேத் வர்மா 6, சலில் அரோரா 2 ரன்​களில் நடையை கட்​டினர். சீராக விளை​யாடி வந்த இஷான் கிஷன் 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 42 ரன்​கள் எடுத்த நிலை​யில் சுனில் நரைன் பந்தை லாங்க் ஆஃப் திசை​யில் விளாசிய போது அனுகுல் ராயிடம் கேட்ச் ஆனது.

இதைத் தொடர்ந்து பாட் கம்​மின்ஸ் 10, ஷிவங்க் குமார் 1, ஹர்​ஷால் படேல் 6 ரன்​களில் நடையை கட்​டினர். இதனால் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 19 ஓவர்​களில் 165 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது.

ஒரு கட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 9 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 105 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. இதனால் அந்த அணி 200 முதல் 220 ரன்​களை எளி​தாக குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் வருண் சக்​ர​வர்த்​தி​யும், சுனில் நரைனும் அற்​புத​மாக செயல்​பட்​ட​தால் அடுத்த 11 ஓவர்​களில் ஹைத​ரா​பாத் அணி​யால் 60 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. இந்த காலக்​கட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 8 விக்​கெட்​களை கொத்​தாக தாரை​வார்த்​தது.

கொல்​கத்தா அணி தரப்​பில் வருண் சக்​ர​வர்த்தி 4 ஓவர்​களை வீசி 36 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சுனில் நரைன் 4 ஓவர்​களை வீசி 31 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்கெட்களையும், கார்த்​திக் தியாகி 4 ஓவர்​களை வீசி 30 ரன்களை வழங்கி 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர். வைபவ் அரோ​ரா, கேமரூன் கிரீன், அனுகுல் ராய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்​பற்​றினர்.

166 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அங்​ரிஷ் ரகு​வன்ஷி 47 பந்​துகளில், 2 சிக்ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​களும், கேப்​டன் அஜிங்க்ய ரஹானே 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 43 ரன்களும், ஃபின் ஆலன் 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரிகளு​டன் 29 ரன்​களும் விளாசினர்.

ரிங்கு சிங் 11 பந்​துளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 22 ரன்களும், கேமரூன் கிரீன் 3 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆட்ட நாயக​னாக வருண் சக்​ர​வர்த்தி தேர்​வா​னார். 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற கொல்​கத்தா அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது.

9 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள கொல்​கத்தா அணி 3 வெற்​றி, 5 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 7 புள்​ளி​களு​டன் 8-வது இடத்​தில் தொடர்​கிறது. சன்​ரைசர்​ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு இது 4-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 4 தோல்வி​களு​டன்​ 12 புள்​ளி​கள்​ பெற்​று 3-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT