விளையாட்டு

இளம் வயதில் சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மகாராஷ்டிரா - பிஹார் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த பிஹார் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 61 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. அவருக்கு 14 வயது 250 நாட்கள் ஆகிறது.

இதற்கு முன்னர் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் ஜோல் 18 வயது 118 நாட்களில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மகாராஷ்டிரா 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் பிரித்வி ஷா 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார்.

SCROLL FOR NEXT