சூர்யவன்ஷி
இந்தூர்: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்தூரில் சவுராஷ்டிரா - பிஹார் அணிகள் மோதின. இதில் பிஹார் அணியின் கேப்டன் சூர்யவன்ஷி களமிறங்கினார். அவருக்கு வயது 15 ஆண்டுகள், 232 நாட்கள். இதன் வாயிலாக ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் கேப்டன் பொறுப்பேற்ற வீரர் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் குரோஷியா அணியின் ஜாக் வுகுசிக் 17 வயது, 311 நாட்களில் கேப்டனாக களமிறங்கியதே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை அவர், கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சைப்ரஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நிகழ்த்தியிருந்தார். சூர்யவன்ஷி பேட்டிங்கில் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.