புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கெய்ரன் பொல்லார்ட் கடந்த வாரம் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்தின் மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவால் குல்கர்னி பந்துவீச்சு மேம்பாட்டுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.