இகா ஸ்வியாடெக்

 
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு ஜிவரேவ், இகா ஸ்வியாடெக், கோகோ காஃப் தகுதி

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் பிரிவு 4-வது சுற்​றில் விளை​யாட அமெரிக்​கா​வின் கோகோ காஃப், போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ளனர். இதே​போல் ஜெர்​மனி வீரரும், தரவரிசை​யில் முதல் இடத்​தில் இருப்​பவ​ரு​மான அலெக்​சாண்​டர் ஜிவரேவ் ஆடவர் பிரிவு 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார்.

நியூ​யார்க் நகரில் அமெரிக்க ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன.

நேற்று முன்​தினம் நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் அமெரிக்க வீராங்​க​னை​யும், தரவரிசை​யில் 4-வது இடத்​தில் இருப்​பவ​ரு​மான கோகோ காஃப், ஸ்பெ​யினின் கிறிஸ்​டினா புஸ்கா ஆகி​யோர் மோதினர். இதில் கோகோ காஃப் சிறப்​பாக விளை​யாடி 6-3, 6-4 என்ற நேர் செட்​களில் கிறிஸ்​டி​னாவை வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு 3-வது சுற்​றுப் போட்​டி​யில் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள இகா ஸ்வி​யாடெக்​கும், தரவரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள செக் குடியரசு வீராங்​கனை மேரி பவுஸ்​கோ​வா​வும் மோதினர். இதில் இகா ஸ்வி​யாடெக் 7-6 (7/3), 7-6 (7/3) என்ற செட் கணக்​கில் மேரி பவுஸ்​கோ​வாவை தோற்​கடித்து 4-வது சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார்.

மற்ற மகளிர் பிரிவு ஒற்​றையர் ஆட்​டங்​களில் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் மிர்ரா ஆண்ட்​ரீவா (ரஷ்​யா) 6-2, 7-6 (7/5) என்ற செட் கணக்​கில் செக் குடியரசு வீராங்​கனை நிக்​கோல் பார்​துன்​கோ​வாவை​யும், தரவரிசை​யில் 24-வது இடத்​தில் உள்ள ஆஸ்​திரி​யா​வின் அனஸ்​தாஷியா போட​போவா 6-2, 7-5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோ​வாவை​யும், தரவரிசை​யில் 14-வது இடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் இவா ஜோவிக் 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்​கில் பிலிப்​பைன்​ஸின் அலெக்​சாண்​டர் ஈலா​வை​யும் தோற்​கடித்​தனர்.

சீனா​வின் ஜெங் கின்​வென் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் மாடிஸன் கீஸை​யும், ஜப்​பான் வீராங்​க​னை​யும், தரவரிசை​யில் 13-வது இடத்​தில் உள்ள நவோமி ஒசாகா 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்​கில் பெல்​ஜி​யத்​தின் எலிஸ் மெர்ட்​டென்​ஸை​யும் சாய்த்​தனர்.

ரைபகினா அபாரம்

கஜகஸ்​தான் வீராங்​க​னை​யும், தரவரிசை​யில் 2-வது இடத்​தில் இருப்​பவ​ரு​மான எலீனா ரைபகினா 7-6 (8/6), 6-3 என்ற செட் கணக்​கில் உக்​ரைன் வீராங்​கனை யூலியா ஸ்டாரோடப்ட்​சே​வாவை வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆடவர் பிரிவு 3-வது சுற்று ஆட்​டத்​தில் ஜெர்​மனி வீரர் அலெக்​சாண்​டர் ஜிவரேவ் 6-2, 7-6 (7/2), 6-2 என்ற செட் கணக்​கில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ​வைத் தோற்​கடித்து 4-வது சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு மற்ற ஆட்​டங்​களில் இத்​தாலி வீரர் லூசி​யானோ டார்​டெரி 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் டேன் ஸ்வீனியை​யும், பிரான்​ஸின் ஆர்த்​தர் ஜியா 7-6 (9/7), 3-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் மைக்​கேல் ஜெங்​கை​யும், நெதர்​லாந்​தின் போட்​டிக் வான் டி ஜான்ட்​ஷல்ப் 3-6, 7-6 (7/3), 4-6, 7-6 (8/6), 6-3 என்ற செட் கணக்​கில் பெல்​ஜி​யத்​தின் ஜிஜோவ் பெர்க்​ஸை​யும் வீழ்​த்​தினர்.

பாம்ப்ரி-வீனஸ் ஜோடி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது.

நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் யூகி பாம்ப்ரி, மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன், பாட்ரிக் டிர்ஹாக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் செக்கர்மேன், பாட்ரிக் ஜோடி 7(7)-6(4), 7(7)-6(3) என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி, வீனஸ் ஜோடியை வீழ்த்தியது.

அதேபோல் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், பெலாரஸின் இவான் லியூட்டர்எவிச் ஜோடி 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆர்த்தர் பெர்ரி, ஜோஷுவா பாரிஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.

SCROLL FOR NEXT