கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜூடோ பிரவில் இந்திய வீராங்கனை உன்னதி சர்மா வெண்கலம் வென்றார்.
நேற்று இரவு நடைபெற்ற மகளிர் 63 கிலோ ஜூடோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உன்னதி சர்மாவும், தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஸ்கை நோயஸ்டரும் மோதினர்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை உன்னதி சர்மா ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் உன்னதி சர்மா 100-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தைக் கைப்பற்றினார்.