விளையாட்டு

அரை இறுதியில் உன்னதி ஹூடா

செய்திப்பிரிவு

தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடர் தைபே சிட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் உன்னதி ஹூடா, சகநாட்​டைச் சேர்ந்த தேவிகா ஷிகாக்கை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் உன்​னதி ஹூடா 23-21, 21-16 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் தன்வி சர்மா 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்​தின் சுபனிடா கதே​தாங்கை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார்​.

SCROLL FOR NEXT