இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ்

 
விளையாட்டு

யு-20 தடகள சாம்​பியன்​ஷிப்: இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள்

செய்திப்பிரிவு

யூஜின்: அமெரிக்​கா​வின் யூஜின் நகரில் யு-20 தடகள சாம்பியன்ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான ஈட்டி எறிதல் தகுதி சுற்​றில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றிருந்த இந்தியாவின் ஆஷிஷ் யாதவ் 69.87 மீட்​டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு இந்​திய வீர​ரான தரணிதரன் ‘பி’ பிரி​வில் 68.07 மீட்​டர் தூரம் எறிந்து ஒட்​டுமொத்​த​மாக 12-வது இடம் பிடித்து இறுதி போட்​டிக்​குள் நுழைந்​தார். தரணிதரன் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்.

மகளிருக்​கான வட்டு எறிதல் தகுதி சுற்​றில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றிருந்த இந்​தி​யா​வின் அமானத் கம்​போஜ் 52.58 மீட்​டர் தூரம் எறிந்து ஒட்​டுமொத்​த​மாக 12-வது இடம் பிடித்து இறு​திப் போட்டிக்கு தகுதி பெற்​றார்.

ஆடவருக்​கான 800 மீட்​டர் ஓட்​டம் தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் மொகலி வெங்​கட்​ராம் பந்தய தூரத்தை 1:52.81 விநாடிகளில் கடந்து ஹீட் 5-ல் 3-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்னேறினார்.

மற்​றொரு இந்​திய வீர​ரான யுவின் ஆனந்த், ஹீட் 1-ல் 7-வது இடமும், ஒட்​டுமொத்​த​மாக 30-வது இடமும் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். தமிழகத்தை சேர்ந்த அவர், பந்தய தூரத்தை 1:52.37 வினாடிகளில் கடந்​திருந்​தார்.

4×400 மீட்​டர் கலப்பு தொடர் ஒட்​டத்​தில் பியூஷ் ராஜ், தஹ்ரா கதுன், சையத் சபீர், தியா ஆறு​முகம் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்​கள் 22.85 வி​னாடிகளில் கடந்து ஒட்​டுமொத்​த​மாக 11-வது இடத்தை பிடித்து போட்​டி​யில் இருந்​து வெளி​யேறியது.

SCROLL FOR NEXT