புதுடெல்லி: யு-20 இந்திய மகளிர் கால்பந்து அணி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக 2 நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இதன் முதல் ஆட்டம் இன்று மாலை 5 அணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள எஃப்சி மெட்ராஸ் அகாடமியில் நடைபெறுகிறது. 2-வது போட்டி டிசம்பர் 2-ம் தேதி இதே அகாடமியில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளுக்கான 24 பேர் கொண்ட யு-20 இந்திய மகளிர் அணியை தலைமை பயிற்சியாளர் ஜோகிம் அலெக்சாண்டர்சன் அறிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்: மெலடி சானு கெய்ஷாம், மோனாலிஷா தேவி மொய்ராங்தெம், ரிபன்சி ஜமு (கோல்கீப்பர்கள்), அலினா சிங்ககம், சிண்டி ரெம்ருட்புயி கோல்னி, ஜூஹி சிங், நிஷிமா குமாரி, ரெமி தோக்சோம், சஹேனா, ஷுபாங்கி சிங், தோய்பிசனா சானு தோய்ஜாம், விக்சித் பாரா (டிஃபென்டர்கள்), அஞ்சு சானு கயென்பைபம், அரினா தேவி நமீரக்பம், பூமிகா தேவி குமுச்சம், குஷ்பு சரோஜ், மோனிஷா சிங்கா, நேஹா (நடுகளம்), பபிதா குமாரி, தீபிகா பால், லிங்டிகிம், ஷில்ஜி ஷாஜி, சிபானி தேவி நோங்மெய்காபம், சுலஞ்சனா ரவுல் (முன்களம்).