விளையாட்டு

உலக பாட்மிண்டன் அரை இறுதியில் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் தொடர் டெல்லியில் உள்ள இந்​திரா காந்தி மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் இரட்​டையர் பிரிவு அரை இறு​தி​யில் உலகத் தரவரிசை​யில் 39-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலகத் தரவரிசை​யில் முதலிட​மும் நடப்பு சாம்​பியனு​மான சீனா​வின் லியு ஷெங் ஷு, டான் நிங் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

ஒரு மணி நேரம் 11 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 13-21, 8-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றது.

SCROLL FOR NEXT