விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: அஸ்வந்த் ரூ.14.45 லட்சத்துக்கு ஏலம்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்சிஏ சார்​பில் நடத்​தப்​பட்டு வரும் டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் போட்டி வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கு​கிறது. இம்​முறை தொடர் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. முதல் கட்ட போட்டி ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்​கல்​லிலும், 2-வது கட்ட போட்டி ஆகஸ்ட் 18 முதல் 28 வரை சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தி​லும் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான வீரர்​கள் ஏலம் நேற்று டிஎன்சிஏ வளாகத்​தில் நடை​பெற்​றது. இதில், அதி​கபட்​ச​மாக அஸ்வந்த் வால்தப்பாவை ரூ.14.45 லட்​சத்​துக்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி ஏலம் எடுத்​தது. இதற்கு அடுத்​த​படி​யாக முகிலேஷை ரூ.13.70 லட்​சத்​துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சித்​தார்த் மகாதேவனை ரூ.8.70 லட்​சத்​துக்கு மதுரை பாந்​தர்ஸ் அணி​யும் ஏலம் எடுத்​தன.

ஏலத்​துக்கு பின்​னர் டிஎன்​சிஏ தலை​வர் டி. ஜே. ஸ்ரீனி​வாச​ராஜ் கூறும்​போது, “இம்​முறை போட்​டியை சோனி தொலைக்​காட்சி நேரடி ஒளிபரப்பு செய்​கிறது. டிஎன்​சிஏ-​வின் யூடியூப் சானலிலும் நேரலை​யாக போட்​டியை பார்க்​கலாம். முதன்​முறை​யாக இந்​தி, ஆங்​கிலம், தமிழ் என 3 மொழிகளில்​ போட்​டிகள்​ வர்​ணனை செய்யப்​பட உள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT