கோப்புப் படம்

விளையாட்டு

பிபா நடு​வர்​களாக 3 இந்​தி​யர்​கள் தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக கால்​பந்து சம்​மேளன (பி​பா) நடு​வர்​களாக இந்தி​யா​வைச் சேர்ந்த 3 பேர் தேர்​வாகி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: குஜ​ராத்தை சேர்ந்த ரச்​சனா கமானி, புதுச்​சேரியைச் சேர்ந்த அஸ்​வின் குமார், டெல்​லியைச் சேர்ந்த ஆதித்யா புர்​கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்​களாக தேர்​வாகி​யுள்​ளனர்.

அது​மட்​டுமல்​லாமல் முரளிதரன் பாண்​டுரங்​கன்​(புதுச்​சேரி), பீட்டர் கிறிஸ்​டோபர் (மகா​ராஷ்டி​ரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அந்​தச் செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT