விளையாட்டு

கிறைஸ்ட்சர்ச்சில் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: நியூஸிலாந்து தொடரை வெல்லுமா இந்திய அணி?

செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி நாளை (27-ம் தேதி) கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் அதிகாலை 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது.

17 ஆண்​டுகளுக்​குப் பிறகு நியூஸிலாந்து மண்​ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்​றும் முனைப்​பிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்​போட்​டிக்​கான வாய்ப்​பைத் தக்கவைக்கும் நோக்​கிலும் இந்​திய அணி களமிறங்​கு​கிறது. வெலிங்​டனில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்டி எவ்​வித சவாலும் இல்​லாத பேட்​டிங்​குக்கு சாதக​மான ஆடுகளத்​தால் டிராவில் முடிந்​தது. இத​னால் 2-வது டெஸ்ட் போட்​டி​யில் வேகப்பந்து வீச்​சாளர்​களுக்​கும், பேட்​ஸ்​மேன்​களுக்​கும் சமவாய்ப்பு அளிக்​கும் ஆடுகளம் அமைய வேண்​டும் என்று இரு அணி வீரர்​களும் எதிர்​பார்க்​கின்​றனர்.

முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி பேட்​டிங்​கில் சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​யது. கே.எல்.ராகுல் (136), ரிஷப் பந்த் (128) ஆகியோர் சதமடித்து அசத்​தினர். கேப்​டன் ஷுப்​மன் கில் 98, தேவ்​தத் படிக்​கல் 85, யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 80, துருவ் ஜூரல் 78 ரன்​கள் விளாசி பலம் சேர்த்​தனர். இத​னால் இந்​திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை படைத்​திருந்​தது. இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 352 ரன்​கள் முன்​னிலை பெற்றிருந்த போதிலும் எவ்​வித சவாலும் இல்​லாத பேட்​டிங்​குக்கு சாதக​மான ஆடுகளத்​தால் டிராவில் முடிந்​தது.

இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்பிரீத் பும்ரா முக்கியமான ஆயுத​மாகத் திகழ்​கிறார். ஆனால் முதல் டெஸ்ட் போட்​டி​யில் அவருக்கு ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அன்​ஷுல் கம்​போஜ் ஆகியோரிடம் இருந்து போதிய அளவி​லான ஆதரவு கிடைக்​க​வில்லை.

ஆடுகளம் கைகொடுக்​காத நிலை​யில், வித்​தி​யாச​மான தொழில்​நுட்​பங்​களை கையாளும் தந்​திர​மும் வாஷிங்​டன் சுந்​தரிடம் இல்லாதது ஏமாற்​றத்தை கொடுத்​தது. இத​னால் பந்​து​வீச்சை பலப்படுத்​தும் வித​மாக முகமது சிராஜ், குர்​னூர் பிரார், ரவீந்​திர ஜடேஜா அல்​லது நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை விளை​யாடும் லெவனில் சேர்ப்​பது குறித்து இந்​திய அணி ஆலோ​சிக்​கக்​கூடும்.

இரண்​டாவது டெஸ்​டில் இந்​திய பந்​து​வீச்​சாளர்​கள் துல்​லிய​மான லைன் மற்​றும் லெந்த்​தில் பந்​து​வீசுவது அவ​சி​யம். நியூஸிலாந்து அணி​யில் முதல் டெஸ்​டில் ஹென்றி நிக்​கோல்ஸ் (175), கிளென் பிலிப்ஸ் (118) சதம் அடித்​திருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் கேப்​டன் டாம் லேதம், டாம் பிளண்​டல், ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் மட்டை வீச்​சில் சிறப்​பாக செயல்​பட தவறினர். இவர்கள் இம்​முறை பொறுப்​புடன் விளை​யாட முயற்​சிக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் சொந்த மண்​ணில் மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்​கப் டஃபி, நேதன் ஸ்​மித் ஆகியோரை உள்​ளடக்​கிய வேகக்​கூட்​டணி தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறியது. இதில் ஜேக்​கப் டஃபி 201 ரன்​களை தாரை வார்த்து இருந்​தார். இத​னால் நியூஸிலாந்து அணி தனது பந்​து​வீச்சு வியூகங்​களை மாற்றி அமைக்​கக்​கூடும்.

இந்​திய அணி​யைப் பொறுத்​தவரை பேட்​டிங்​கில் ரன்​களைக் குவிப்​ப​தைவிட, நியூஸிலாந்து அணி​யின் 20 விக்​கெட்​டுகளை​யும் வீழ்த்​து​வது முக்​கிய​மான சவாலாக இருக்​கும். மறு​புறம், நியூஸிலாந்து அணி முதல் டெஸ்​டில் வெளிப்​படுத்​திய போராட்ட குணத்​தைத் தொடர விரும்​பும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT