விளையாட்டு

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் தருண் மனேப்பள்ளி

செய்திப்பிரிவு

பாசல்: சு​விட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 42-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் தருண் மனேப்​பள்​ளி, போட்​டித் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் கென்டா நிஷிமோ​டாவுடன் மோதி​னார்.

இதில் தருண் மனேப்​பள்ளி 16-21, 21-16, 7-2 என்ற செட் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது கென்டா நிஷிமோடா தோள்​பட்டை காயம் காரண​மாக வில​கி​னார். இதனால் தருண் மனேப்​பள்ளி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

2-வது சுற்​றில் தருண் மனேப்​பள்​ளி, மலேசி​யா​வின் ஜஸ்​டின் ஹோவுடன் மோதுகிறார். மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் மாளவிகா பன்​சோத், உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் போர்ன்​பாவீ சோச்​சு​வாங்​குடன் மோதி​னார். இதில் மாளவிகா பன்​சோத் 11-21, 15-21 என்ற நேர் செட் கணக்​கில்​ தோல்​வி அடைந்​தா​ர்​.

          
SCROLL FOR NEXT