விளையாட்டு

மே.இ.தீவு​களுடன் டெஸ்ட் தொடர்: வங்​கதேச வீரர் மோமினுல் காயம்

செய்திப்பிரிவு

டாக்கா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெதிரான 2-வது டெஸ்ட் போட்​டி​யி​லிருந்து வங்​கதேச வீரர் மோமினுல் ஹக் காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார். வங்​கதேசத்​தில், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சுற்​றுப்​பயணம் செய்து கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. 2 போட்​டிகள் இந்​தத் தொடரில் முதல் டெஸ்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.

இந்​நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 5-ம் தேதி சில்​ஹெட் மைதானத்​தில் தொடங்க உள்​ளது.

இந்​நிலை​யில் இந்த டெஸ்ட் போட்​டி​யி​லிருந்து வங்​கதேச வீரர் மோமினுல் ஹக் வில​கி​யுள்​ளார். முதல் டெஸ்ட் போட்​டி​யில் ஃபீல்​டிங் செய்​த​போது மோமினுல் ஹக் காயமடைந்​தார்.

அந்த காயத்​தி​லிருந்து குணமடை​யாததால் அவர் 2-வது போட்​டி​யி​லிருந்து வில​கி​யுள்​ளார். அவருக்​குப் பதிலாக அணி​யில் அமைத் ஹுசன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார் என வங்​கதேச கிரிக்​கெட் வாரியம் தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT