துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் தலா ஓர் இடத்தை இழந்துள்ளனர்.
ரிஷப் பந்த் 713 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், ஷுப்மன் கில் 697 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் டாப் 10-ல் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.