இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

 
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் தொடர்: மே 19-ல் இந்திய கிரிக்கெட் அணி தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெறவில்லை.

ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 14-ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. 2-வது போட்டி 17-ம் தேதி லக்னோவிலும் கடைசி மற்றும் 3-வது போட்டி 20-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் டெல்லியை சேர்ந்த பிரின்ஸ் யாதவ், விஜய் ஹசாரே டிராபியில் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் 16 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டித் தொடரில் மட்டும் அவர், பங்கேற்கக்கூடும்.

SCROLL FOR NEXT