விளையாட்டு

நியூஸிலாந்துடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா

செய்திப்பிரிவு

ஆக்லாந்து: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி ஆக்​லாந்​தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி தொடரை தன்​வசப்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் இரு அணிகளும் இன்று 4-வது போட்​டி​யில் ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் மோதுகின்​றன.

இந்​திய அணி தொடரை வென்​று​விட்​ட​தால் எந்​த​வித நெருக்​கடியும் இல்​லாமல் களமிறங்​கு​கிறது. அதேவேளை​யில் சொந்த மண்​ணில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்​றியை பெற வேண்​டிய நெருக்​கடிக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி​யில் ஒரு சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. குல்​தீப் யாதவ், வருண் சக்​ரவர்த்தி ஆகியோர் விளை​யாடும் லெவனில் இடம் பெறக்​கூடும்.

இது நிகழ்ந்​தால் அக்​சர் படேல், நமன் திர் அல்​லது பிரின்ஸ் யாதவுக்கு ஓய்வு கொடுக்​கப்​படக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் புவனேஷ்​வர் குமார் இறுதிக்​கட்ட ஓவர்​களில் சிறப்​பாக செயல்​பட்டு கவனம் ஈர்த்​தார். ரிதத்​துக்கு திரும்பி உள்ள அவர், நியூஸிலாந்து அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்கூடும்.

கடந்த ஆட்​டத்​தில் சதம் விளாசி அசத்​திய அபிஷேக் சர்​மாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும்.

கடந்த இரு ஆட்​டங்​களில் காயம் காரண​மாக களமிறங்​காத இஷான் கிஷன் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது நேற்று வரை உறுதி செய்​யப்​படா​மல் இருந்​தது. ஒரு​வேளை அவர், களமிறங்​காத பட்​சத்​தில் வைபவ் சூர்​ய​வன்​ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்​கப்​படும். அதேவேளை​யில் நிதிஷ் குமார் ரெட்​டிக்கு பதிலாக ஷிவம் துபே களமிறக்​கப்​பட வாய்ப்பு உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT