மவுண்ட் மவுங்கனி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வக்கிறது. முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்த நிலையில் 3-வது ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.
4-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்திருந்தது.
இந்நிலையில் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். அதேவேளையில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமனில் முடிவடையும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூஸிலாந்து அணி கடந்த 7 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை இழக்காமல் இருந்து வருகிறது. இந்த சாதனையை அந்த அணி தொடரச் செய்யுமா? என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.