விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20: 14 ரன்களில் இந்தியா வெற்றி

செய்திப்பிரிவு

இந்தூர்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 20 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 223 ரன்​கள் குவித்​தது. அபிஷேக் சர்மா அதிரடி​யாக விளை​யாடி 30 பந்​துகளில் 69 ரன்​கள் குவித்​தார்.

இந்​தி​யா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​களுக்கு இடையி​லான சர்​வ​தேச டி20 தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற்று வரு​கிறது. 2 போட்​டிகள் முடிந்த நிலை​யில் இரு அணி​களும் தலா ஒரு வெற்​றியைப் பெற்று தொடரில் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளன. இந்​நிலை​யில் இந்​தூரில் உள்ள ஹோல்​கர் மைதானத்​தில் நேற்று இரவு 7 மணிக்கு 3-வது டி20 ஆட்​டம் நடை​பெற்​றது.

டாஸில் வென்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் கேப்​டன் ஷாய் ஹோப், இந்​தி​யாவை பேட்​டிங் செய்ய அழைத்​தார். தொடக்க ஆட்​டக்​காரர்​களாக சஞ்சு சாம்​சனும், அபிஷேக் சர்​மா​வும் களமிறங்​கினர். கடந்த போட்​டி​யில் அதிரடி​யாக விளை​யாடி 82 ரன்​கள் குவித்த சஞ்சு சாம்​சன் நேற்​றைய ஆட்​டத்​தில் 3 ரன்​களி​லேயே பெவிலியன் திரும்பி ரசிகர்​களை ஏமாற்​றி​னார். பின்​னர் அபிஷேக் சர்​மாவுடன் இஷான் கிஷன் இணைந்து அதிரடி​யாக விளை​யாடி​னார்.

இஷான் 18 பந்​துகளில் 6 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 37 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராஸ்​டன் சேஸ் பந்​தில், ஷாய் ஹோப் ஸ்டம்​பிங் செய்ய ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன்​னில், எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

மறு​முனை​யில் அதிரடி​யாக விளை​யாடிய அபிஷேக் சர்​மா, 18 பந்​துகளில் அரை சதம் விளாசி​னார். சர்​வ​தேச டி20 போட்​டிகளில் இது அவரது 14-வது அரை சதமாக அமைந்​தது. 30 பந்​துகளில் 6 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 69 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் அவர் ஆட்​ட​மிழந்​தார்.

திலக் வர்மா 28, நமன் திர் 10, நிதிஷ் குமார் ரெட்டி 21, அக்​சர் படேல் 20, அர்​ஷ்தீப் சிங் 11 ரன்​கள் சேர்த்​தனர். பிரின்ஸ் யாதவ் 13 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இதையடுத்து 224 ரன்​கள் சேர்த்​தால் வெற்றி என்ற இலக்​குடன் மேற்கு இந்​தி​யத் தீவு​கள்​ அணி பேட்​டிங்​ செய்​ய ஆயத்​த​மானது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கமில் பூரன் 42, ஹெட்மயர் 43, ரூதர்ஃபோர்ட் 32, சாம்ப்ஸன் 21, ஸ்ப்ரிங்கர் 35 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 3, நமன் திர் 2, அக்சர் மற்றும் நிதிஷ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 14 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் நான்காவது ஆட்டம் வரும் 14-ம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது.

அதிக சிக்ஸர்கள்

ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் வரிசையில் அபிஷேக் சர்மா, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 68 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். இந்த வரிசையில் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மா (54 சிக்ஸர்கள், 2025-ம் ஆண்டு), 3-வது இடத்தில் இஷான் கிஷன் (52 சிக்ஸர்கள், 2026-ம் ஆண்டு), 4-வது இடத்தில் சாஹிப்சாதா பர்ஹான் (45 சிக்ஸர்கள், 2025-ம் ஆண்டு) ஆகியோர் உள்ளனர்.

SCROLL FOR NEXT