விஜ் ஆன் ஜீ(நெதர்லாந்து): டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தின் விஜ் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை எதிர்த்து அர்ஜுன் எரிகைசி விளையாடினார். 32-வது நகர்த்தலில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி.குகேஷும், உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவும் மோதினர். 78 நகர்த்தல்களில் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் சுற்றின் முடிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமேன் ஆகியோர் தலா ஒரு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
டி.குகேஷ், இந்திய கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாப், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட், செக் குடியரசின் தாய் டேய் வான் குயுடன், துருக்கியின் யாகி கான் எர்டோக்மஸ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் ஆகியோர் 0.5 புள்ளிகளுடன் உள்ளனர்.