ஆர்லியன்ஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலகத் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தன்வி சர்மா, 23-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நட்சுகி நிடைராவுடன் மோதினார்.
43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தன்வி சர்மா 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன், அர்ஜூன் ஜோடி 12-21, 20-22 என்ற செட் கணக்கில் கனடாவின் லியோ ரோலி கார்னாண்டோ, பகாஸ் மவுலானா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.