விளையாட்டு

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் தன்வி சர்மா

செய்திப்பிரிவு

அசன்: கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் உள்ள அசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் யுவான் அன் சி-யை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான ரக் ஷிதா ராம்ராஜ், இஷாராணி பருவா, அன்மோல் ஹார்ப், அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 20-22, 21-14, 12-21 என்ற செட் கணக்கல் இஸ்ரேலின் டானில் டுபோவென்கோவிடம் தோல்வி அடைந்தார்.

SCROLL FOR NEXT