விளையாட்டு

பாட்​மிண்​டன் கால் இறுதியில் தன்வி சர்மா

செய்திப்பிரிவு

ஆர்​லியன்ஸ்: பிரான்ஸ் நாட்​டில் ஆர்​லியன்ஸ் மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்றில் இந்​தி​யா​வின் தன்வி சர்மா, சகநாட்​டைச் சேர்ந்த அன்​மோல் ஹார்​புடன் மோதி​னார். இதில் தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் தரவரிசை​யில் 44-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் இஷா​ராணி பருவா 21-11, 14-21, 21-17 என்ற செட் கணக்​கில் 42-வது இடத்​தில் உள்ள கனடா​வின் வென் யு ஸாங்கை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் கால்ப​தித்​தார். ஆடவருக்​கான இரட்​டையர் பிரி​வில் இந்தியா​வின் ஹரி​கரன் ஹம்​சகருணன், அர்​ஜூன் ஜோடி 26-24, 21-14 என்ற செட் கணக்​கில் ஸ்காட்​லாந்​தின் அலெக்​சாண்​டர், ஆடம் பிரிங்​கில் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

          
SCROLL FOR NEXT