தன்வி பத்ரி
தாகர்: செனகல் நாட்டின் தாகர் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் மகளிருக்கான பாட்மிண்டனில் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி பத்ரி, சீனாவைச் சேர்ந்த யி ஷின் ஜாங்குடன் மோதினார்.
இதில் தன்வி பத்ரி 21-15, 13-21, 24-26 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இறுதி சுற்றில் தோல்வி அடைந்த தன்வி பத்ரி வெள்ளி பதக்கம் பெற்றார்.
இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் தன்வி பத்ரி.